செவ்வாய், 22 ஜூலை, 2014

அத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா?


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
"நபி (ஸல்) அவர்கள் தமது வலக்கையை வலப்பக்கத் தொடையின் மீது வைத்து, பெருவிரலுக்கு அடுத்துள்ள (சுட்டு) விரலால் "கிப்லா' பக்கம் சைகை செய்தார்கள். தமது பார்வையை அதை நோக்கி அல்லது அதன் பக்கம் செலுத்தினார்கள்'' என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர்கள், "அல்லாஹ்வின்  தூதர் (ஸல்)  அவர்கள்  இவ்வாறு செய்ததை நான் பார்த்தேன்'' என்றும்  கூறினார்கள்.  நூல் : நஸாயீ (1148)

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது (அத்தஹிய்யாத்) அமர்வில் பிரார்த்திக்க உட்கார்ந்தால்  தமது வலக் கையை வலது தொடையின் மீதும்,  இடக்கையை இடது  தொடையின் மீதும் வைத்துச் சுட்டு விரலால் சைகை செய்வார்கள்.
நூல் : முஸ்லிம் (1015)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் உட்கார்ந்தால் தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும் வலக் கையை வலது கால் மூட்டின் மீதும் வைப்பார்கள்.(அரபியர் வழக்கில்) ஐம்பத்து மூன்று என எண்ணுவதைப் போன்று  (சிறுவிரல், மோதிர விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களையும் உள்ளங்கையுடன் சேர்த்து) சுட்டு விரலால் சைகை செய்வார்கள். நூல் : முஸ்லிம் (1017)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
 நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம் கைகளை முழங்கால்கள் மீது வைப்பார்கள். பெரு விரலை ஒட்டியுள்ள வலக் கை  (சுட்டு)விரலை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். இடக் கையை இடது கால் மூட்டின் மீது  விரித்து வைத்திருப்பார்கள். நூல் : முஸ்லிம் (1016) 

நபி (ஸல்) அவர்கள் தஷஹ்ஹுதில் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) நூல் : இப்னு மாஜா (902)

நபி(ஸல்) அவர்கள் தஷஹ்ஹுது துஆ(ஷஹாதத்) ஓதும் பொழுது தங்களின் இடது கையை இடது தொடை மீதும், வலது கையை வலது தொடை மீதும் வைத்து இருப்பில் (வலக்கையின் ஆட்காட்டி) விரலை உயர்த்தி சமிக்ஞைதான் செய்தார்கள், அசைத்து கொண்டு இருக்கமாட்டார்கள் என இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்             இமாம் பைஹகி(ரஹ்) - 2786 - ஸஹிஹ்
அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் இருப்புக்கு வந்தால் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். தமது வலது கையை தொடையின் மீது வைத்து  தமது விரலால் சமிக்கை செய்து கொண்டிருப்பார்கள். நூல் : அஹ்மது (14828)

வாஇல் பின் ஹுஜுர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது "ரக்அத்'தில் (இருப்பில்) அமர்ந்த போது, தமது இடக்காலைப் படுக்கவைத்து, வலக்காலை நட்டு வைத்தார்கள். தமது வலக் கையை வலப்பக்கத் தொடையின் மீது வைத்து,(ஆட்காட்டி) விரலைப் பிரார்த்தனைக்காக நீட்டினார்கள். தமது இடக்கையை  இடப்பக்கத் தொடையின் மீது வைத்தார்கள். நூல் : நஸாயீ (1147)

அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் துஆ செய்யும் போது தனது விரலால் சமிக்கை செய்வார்கள். அதைஅசைக்க மாட்டார்கள்.   நூல் : நஸாயீ (1253)

அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள்கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தொழுகையில் இருப்புக்கு வந்துவிட்டால் பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் தனதுவலக்கையை தொடையின் மீது வைத்து தன் விரலால்  இஷாரா செய்து கொண்டிருப்பார்கள்.   நூல் : அஹ்மது 14828
இஷாரா என்ற வார்த்தைக்குசைகை செய்தல் சுட்டிக்காட்டுதல் என்பது பொருள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தொழுது கொண்டிருக்கும் பொழுது நான் அவர்களிடம் சென்றேன். அப்பொழுது அவர்கள் இடது கையை இடது தொடையில் வைத்து இருந்தார்கள். வலது கையை வலது கையை வலது தொடையில் வைத்து இருந்தார்கள். அப்போது விரல்களை மடக்கி ஆட்காட்டி விரலை நீட்டி வைத்துக் கொண்டு 'இதயங்களை புரட்டிக் கொண்டிருப்பவனே! எனது இதயத்தை உன் மார்க்கத்தின் மீது நிலைப்படுத்தி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.
ஆதாரம்: திர்மிதி                                            அறிவிப்பவர்: ஆஸிம பின் குலைப்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள், தஷஹ்ஹுது ஓதும் பொழுது தங்களின் இடது கையை இடது தொடை மீதும், வலது கையை வலது தொடை மீதும் வைத்து துஆ ஓதும்பொழுது ஆட்காட்டி விரலைக் கொண்டு சுட்டிக்காட்டிக்கொண்டிருப்பார்கள். அதனை அசைக்கமாட்டார்கள்.
ஆதாரம்: நஸாயீ                     அபூதாவூது  
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்ரலியல்லாஹு அன்ஹு.

தொழுகையில் தொப்புளுக்கு கீழ் கைகளை வைப்பது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்ற போது... தங்களது வலக்கையால் இடக்கையைப் பிடித்திருந்ததை நான் பார்த்தேன்.அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)  நூல்: அபூதாவூத்  624
தொழுகையில் (இடது) முன் கையின் மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்கு கீழ் வைப்பது நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாகும் என அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(அபூதாவுத் 645, பைஹகி 2170, 2171)
மௌலவி S.K.முஹம்மத் முஹ்யீத்தீன் ஹௌஸி B.A        
செல் நம்பர்: +919942407358 +917402127136

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக